திருவண்ணாமலை.மார்ச்.16.,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செங்கம் தொகுதி வேட்பாளர் திரு மு.பெ.கிரி அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட, செங்கம் நகர அலுவலகத்திற்கு வருகை தந்து மஜக நிர்வாகிகளுடன் தேர்தல் பரப்புரை குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய மஜகவின் மாவட்ட செயலாளர் காஜா ஷெரிப் அவர்கள் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் செங்கம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் மஜகவினர் பங்கேற்று தங்களுடைய பிரச்சார வியூகம் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் கழக வேட்பாளர் திரு மு.பெ.கிரி அவர்களின் வெற்றிக்கு பம்பரம் போல் சுழன்று களப்பணியாற்றுவர்கள் என வாக்குறுதி அளித்தார்.
உடன், மாவட்ட,ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#TNElection2021
#MJK2021
#செங்கம்_சட்டமன்ற_தொகுதி_தேர்தல்பணிக்குழு
15.03.2021