மார்ச்.15,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவையாறு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர்கள் துரை சந்திரசேகர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் பங்கேற்க அழைப்பு விடுத்திருத்தார்.
அதன்பேரில் திருவையாறு ஒன்றிய செயலாளர் சேட்டு @ ஹபீப் ரஹ்மான் தலைமையில் ஒன்றியத்திற்குட்பட்ட மஜக கிளை நிர்வாகிகளும், செயல்வீரர்களும் திரளாக பங்கேற்றனர்.
தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் அகமது கபீர், தஞ்சை மாநகர செயலாளர் அப்துல்லா, துணை நகரச் செயலாளர் சாகுல் ஹமீது, வார்டு செயலாளர் காமில் உள்ளிட்ட நிர்வாகிகள் வேட்பாளரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_மாநகர்_மாவட்டம்.