தேர்தல் ஆயத்தப்பணி ஆலோசனை..! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி அவர்களுடன் மயிலாடுதுறை நிர்வாகிகள் சந்திப்பு!


மார்ச்.15,

சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு அளித்து களப்பணி ஆற்றி வருகிறது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர் ஹாஜா சலீம் மற்றும் உறுப்பினர்கள் மிஸ்பாஹூதீன், மாயவரம் சபீர், ஜவகர் அலி, முகம்மது சஃபீக், தைக்கால் ஷாஜஹான் உள்ளிட்டோர் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களை சந்தித்து மாவட்டத்தில் தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.

பொதுச்செயலாளருடன் மாநிலச் செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் உடனிருந்தார்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#மயிலாடுதுறை_மாவட்டம்.
14.03.2021