கும்பகோணம் திமுக வேட்பாளர் மஜக மாவட்ட அலுவலகம் வருகை!


மார்ச்.14,

மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட தேர்தல் ஆயத்த ஆலோசனை கூட்டம் குடந்தையில் மாவட்ட செயலாளர் ஹ. சேக் முஹம்மது அப்துல்லாஹ் தலைமையில் நடைப்பெற்றது. மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம் வரவேற்புரை ஆற்றினார்.

கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் ஹெச். ராசுதீன் பங்கேற்றார். அவருடன் மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் காதர் பாட்சா, தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்பொழுது அங்கு வருகை தந்த திமுக கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சாக்கோட்டை அன்பு நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினார்.

இதில் தஞ்சை வடக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணை, அணி, ஒன்றிய, நகர, கிளை மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் நகர செயலாளர் ராஜ் முஹம்மது நன்றியுரை கூறினார்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்.