பிப்.23.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆறாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட மஜக மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம் மாவட்ட செயலாளர் கண்மணி காதர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் ராஜபாளையம் நகர செயலாளர் சம்சுதீன்.,
Ikp ராஜபாளையம் நகர பொறுப்பாளர் மகபு ஜான், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர், சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்ட வர்களுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியில் ஸ்ரீவி நகர செயலாளர் ஷாஜகான் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#விருதுநகர்_மாவட்டம்
23.02.2021