அன்பு கிறித்தவ உள்ளங்களுக்கு மஜகவின் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..!மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA வாழ்த்து செய்தி.


உலகமெங்கும் வாழும் கிறிஸ்துவ சகோதர சகோதரிகள் பெருமகிழ்ச்சியோடு கொண்டாடும் நிகழ்வாக கிறிஸ்மஸ் பண்டிகை திகழ்கிறது. உலகமெங்கும் பல்வேறு இன மக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானதாகவும் இப்பண்டிகை இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள் என உலக முழக்க கிறித்தவ மக்கள் ஆற்றிவரும் மனிதநேய சேவைகள் எளிய மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுகின்றன.

அன்பின் வழியாக உலகெங்கும் தொண்டாற்றிவரும் கிருத்தவ மக்களின் அரும்பெரும் சேவைகள் மானுடத்தை அழகுபடுத்திக் கொண்டாடுகின்றன.

இத்திருநாளில் அன்பையும், இணக்கத்தையும், நீதியையும் கட்டிக் காக்க உறுதியேற்போம்.

கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

இவண்

மு.தமிமுன் அன்சாரி MLA
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி.
24.12.2020