டிச.08,
விவசாயிகளின் நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து கட்சிகளின் சார்பில் அதிரையில் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் நடைப்பெற்றது.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மறியலில் மஜக மாவட்ட செயலாளர் அதிரை சேக் தலைமையில் மஜகவினர் கலந்து கொண்டு மத்திய அரசின் வேளாண் கருப்பு சட்டங்களுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்த அனைத்து கட்சி, சங்கங்களின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
இதில் மஜக சார்பில் மு.மாவட்ட துணை செயலர் சாகுல் ஹமிது (ஸ்மார்ட்), நகர செயலர் அப்துல் சமது, பொருளாளர் அஷ்ரப், துணை செயலாளர்கள் மர்ஜூக், நபில், இளைஞர் அணி செயலர் ஹக், MJTS செயலாளர் ஆரிப், அன்வர், புதுத்தெரு வார்டு கிளை நிர்வாகிகள் உள்பட மஜகவினர் திரளாக கலந்து கொண்டு கைதாகினர்.
மறியலில் பங்கேற்ற அனைவரையும் காவல்துறை கைது செய்து தனியார் மண்டபங்களில் அடைத்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்.