தோப்புத்துறையில் மழையால் இடிந்து விழுந்த கோயில்.. மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA நேரில் பார்வையிட்டார்!


டிச. 05,

டெல்டா மாவட்டங்களில் தொடர் மழையால் ஆங்காங்கே பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

நேற்று நாகூர் தர்ஹா குளத்தின் தென்கிழக்கு பகுதி பெரிய சுவர் இடிந்து விழுந்தது.

இந்நிலையில் நாகை மாவட்டம் தோப்புத்துறையில் அம்மன் கோயில் ஒன்று நேற்று மாலை இடிந்து விழுந்தது. இது வேதாரண்யஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான வட மரைக்காடர் ஆலயத்தில் உள்ள அம்மன் சன்னதி ஆகும்.

செய்தியறிந்ததும் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் மஜக பேரிடர் மீட்பு குழுவினருடன் அங்கு சென்று இடிந்து விழுந்த கோயிலை பார்வையிட்டார்.

இந்து இளைஞர் நற்பணி மன்ற தலைவர் சிவகுமார் அவர்கள் கோயிலின் பாரம்பர்யம் குறித்து அவரிடம் விளக்கினார்.

உடனே இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை தொடர்பு கொண்ட தமிமுன் அன்சாரி, இது தனது ஊரில் உள்ள கோயில் என்பதை அவரிடம் எடுத்துக் கூறி, உடனடியாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உடனே அதிகாரிகளை அனுப்பி வைப்பதாக கூறினார்.

பொதுச் செயலாளரோடு , நாகை மாவட்ட மஜக மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் அகமதுல்லா, நகரச் செயலாளர் முகம்மது ஷெரிப், துபை மண்டல MKP யின் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஹம்தான், மஜக தகவல் தொழில் நுட்ப அணி பொருளாளர் முபீன், மஜக நகர நிர்வாகிகள் மஜித், லைவ்லி யூசுப், ஜெகபர்தீன் உள்ளிட்ட மஜகவினர் உடனிருந்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.