மஜக நெல்லை மாவட்டம் சார்பாக மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.!! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்பு.!!


மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் சார்பாக வேளாண்மையை – உழவர்களை அழிக்கும் வகையில் மத்திய மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை திட்டம் 2020-தை உடனே வாபஸ் வாங்கவும், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும்.

கொரோனா நெருக்கடிகளால் வாழ்வாதாரத்தை இழந்து உள்ள பீடித் தொழிலாளர்களுக்கு தொழிற்சாலை உரிமையாளர்கள் நிவாரண தொகை வழங்க வேண்டும், ஆகிய மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் நெல்லை நிஜாம் தலைமையில், மாவட்டப் பொருளாளர் பேட்டை மூஸா முன்னிலையில் 27-09-2020 அன்று மாலை 4 மணியளவில் மேலப்பாளையம் சந்தை முக்கு ரவுண்டானா அருகில் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள கறுப்பு சட்டங்களுக்கு எதிராக சூளுரைத்தார்.

மேலும் மாநில துணைச்செயலாளர்கள் காயல் சாகுல், நாகை முபாரக், செயற்குழு உறுப்பினர் முகம்மது அலி இக்பால், சமூக ஆர்வலர் வழக்கறிஞர் அஹமது சாகிப் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர்கள் செய்யதுஅலி, முஸ்தாக், மாவட்ட அணி செயலாளர்கள் அப்பாஸ், ஜமீண், மன்சூர்அலி, நாகூர்மீரான், புகாரி பகுதி செயலாளர்கள் தமிம் அன்சாரி, கலீல், ஷேக் அப்துல் காதர், முத்து குமார், ஒன்றிய செயலாளர்கள் காஜா, அன்சர் பாபு உள்ளிட்ட மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முடிவில் நகர தொழிற்சங்க செயலாளர் A1 மைதீன் அவர்கள் நன்றியுரை கூறி நிறைவுற்றது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்
27-09-2020