ஊட்டி தீ விபத்து! பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய கோரி ஊட்டி MLAவிடம், மஜக பொதுச் செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA வேண்டுகோள்!

ஜூன்.24,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டு 120 கடைகள் சேதமானது.

இது பற்றிய விபரங்களை துணைப் பொதுச் செயலாளர் சுல்தான் அமீர் அவர்கள், பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இது குறித்து ஊட்டி காங்கிரஸ் கட்சி MLA வான திரு.கணேஷ் அவர்களிடம் பொதுச் செயலாளர் அவர்கள் தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு மறு கட்டமைப்பு பெற உதவிடுமாறு கேட்டுக் கொண்டார்.

விரைந்து கடைகள் கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், இதர விஷயங்களும் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் திரு.கணேஷ் MLA அவர்கள் கூறினார்.

இது குறித்து ஊட்டி நகர மஜகவினர் முன் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நீலகிரி_கிழக்கு_மாவட்டம்.