வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு தொடர்ந்து உதவி வரும் திருச்சி மஜக !


திருச்சி. ஜுன்.21,
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தமிழர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர் அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியினர் தொடர்ந்து உதவிகள் செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் பேரா. மைதீன் அப்துல் காதர் தலைமையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வருகை தரும் சகோதர சகோதரிகளுக்கு வாகன ஏற்பாடு செய்து கொடுத்தல், சரியான முறையில் வழிகாட்டல் செய்து அவர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அவர்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல் ஆகியவற்றை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

மேலும் தேவைகேற்ப தங்கும் விடுதிகள், உணவுகள் ஏற்பாடு செய்து வழங்கப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளிலிருந்து நிற்கதியாய் வரும் தங்களுக்கு மஜக வினர் செய்யும் இவ்உதவிக்கு மன ஆறுதலை தருவதாக அவர்களது உறவினர் தொலைபேசி வாயிலாக நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கின்றனர்.

15 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் மஜக-வின் இந்த சேவையை அரசின் உயர் அதிகாரிகளும் வெகுவாகப் பாராட்டினார்.

இதில் பொறுப்பு குழு உறுப்பினர்கள் சையது முஸ்தபா, முஹம்மது பீர்ஷா, மகபூப் பாஷா, மற்றும் பலர் ஒருங்கிணைந்து செய்து வருகின்றனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருச்சி_மாவட்டம்.