அபுபக்கர் எம்எல்ஏ அவர்களுடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு!


தென்காசி:ஜுன்.10.,

கடையநல்லூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர், அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி தென்காசி மாவட்ட செயலாளர் M.பீர் மைதீன், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

இச்சந்திப்பில் தொகுதி பிரச்சனைகள் குறித்தும் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினர்.

இதில் மாவட்ட பொருளாளர் முகம்மது இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர்கள் பொன்னானி அபுதாகிர், ஆதமின் ஹனிபா, கழக பேச்சாளர் முஹம்மது ஹிதாயத்துல்லா, மாணவர் இந்தியா மாவட்டசெயலாளர் சங்கை பீர் மைதீன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்காசி_மாவட்டம்
10.06.2020