அயல்நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் கொரோனா தாக்குதலினால் பணியிழந்து தாய் மண் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
மத்திய அரசு ஏற்பாடு செய்திருக்கும் விமானச் சேவையை பயன்படுத்தி ஊர் திரும்புவதற்காக 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் இதுவரை நான்காயிரத்திற்கும் குறைவானவர்களே தமிழகம் திரும்பி இருக்கின்றனர்.
450-க்கும் மேற்பட்ட விமான சேவையில் இதுவரை 19 சேவை மட்டுமே தமிழகத்திற்கு கிடைத்திருக்கிறது.
மன்னார்குடியை சேர்ந்த எனது நண்பர் மனோகரன் மற்றும் அவரது நண்பர்கள் தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறையாவது எனக்கு தொடர்புகொண்டு அரசிடம் முறையிட்டு எங்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யுங்கள் என கெஞ்சிக் கொண்டிருக்கின்றனர்.
உலகமெங்கும் வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழக தொழிலாளர்கள் பலரின் நிலை இவ்வாறே உள்ளது.
தமிழகம் திரும்ப விண்ணப்பித்துக் காத்திருக்கும் மீதமுள்ள தமிழர்கள் அனைவரையும் உடனடியாக அரசு செலவில் அழைத்துக் கொள்வதற்காக தமிழக அரசு மத்திய அரசிடம் உடனடியாக முறையிட்டு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இதற்காக மனிதநேய ஜனநாயக கட்சி முன்னெடுக்கும் முயற்சிகள் நம்பிக்கை ஊட்டுகிறது.
இதற்காகத் தொடர்ந்து ஊரடங்கு நிலையிலும் இணையதளம் மூலமாக பதாகை ஏந்தி போராட்ட குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் கோரிக்கையை அனைவரும் ஆதரிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
– தங்கர் பச்சான்
08.06.2020