மாணவி ஜெயஸ்ரீயை கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை! முதமிமுன்அன்சாரி MLA அறிக்கை!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி ஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பதற வைக்கிறது.

தனது இறுதி நிமிடங்களில் முனகிக் கொண்டே, நடந்ததை விவரிக்கும் அவரது காணொளி காட்சி கண் கலங்க செய்கிறது.

காட்டுமிராண்டித்தனமான இந்த பாதகத்தை செய்த கல்நெஞ்சம் கொண்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சட்டத்தின் முன்பாக விரைந்து விசாரிக்கப்பட்டு, இவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

மாணவி ஜெயஸ்ரீயின் மரண வாக்குமூலத்தை வைத்து சென்னை உயர் நீதிமன்றமும், மனித உரிமை ஆணையமும் சிறப்பு கவனமெடுத்து, இவ்வழக்கை கண்காணிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
மு. தமிமுன் அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேயஜனநாயககட்சி
11.05.2020