மலேசியா விமான நிலையத்தில் தவிக்கும் இந்தியர்கள்..! மஜக பொருளாளர் எஸ்எஸ்ஹாரூன் ரசீது சந்தித்து ஆறுதல்..!!

மலேசியா.மார்ச்.20.,

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது, இந்த நிலையில் இந்தியாவில் இருந்து சுற்றுலா மற்றும் வியாபார நிமித்தமாக மலேசியா வந்துள்ள இந்தியர்கள் தாய் நாடு திரும்ப முடியாமல் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் மலேசியாவில் தவித்து வருகின்றனர்.

அவர்களில் 250-பேர் மலேசியா விமான நிலையத்தில் தங்கியுள்ளனர். மற்றவர்கள் நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் வெளி இடங்களில் தங்கி உள்ளனர்.

மலேசியாவில் உள்ள இந்திய தூதரகமும் மூடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல், அடிப்படை வசதிகள் கூட செய்து தராமல், தூதரக அதிகாரிகள் தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் விமான நிலையத்தில் உள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் மேலும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அனைவரும் நாடு திரும்ப ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்தார்.

பசியால் வாடும் இந்தியர்களுக்கு மலேசிய புரட்சி இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் உமாகாந்தன் அவர்கள் தலைமையிலான குழு மற்றும் HANA வெல்ஃபேர் அஸோஸியேசன் இணைந்து உணவுப்பொருட்களை வழங்கி வருகிறது.

அந்தக் குழுக்களின் பணிகளை பாராட்டிய பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவையின் தோழர்கள் செயல்பட தயாராக உள்ளனர் என்று அதன் தலைவர் உமாகாந்தனிடம் தெரிவித்தார்.

பொருளாளருடன் கிஷோர், ரகுமான், சைனா கமல் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மலேசியா
20-03-2020