குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து திருப்பூரில்தொடர்தர்ணா.! நாசர் உமரி கண்டன உரை

திருப்பூர் பிப்.23.,

குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்தும் அதை அமல்படுத்தமாட்டோம் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதை தொடர்ந்து திருப்பூர் இளைஞர்கள் கூட்டமைப்பு, குடியுரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு இணைந்து திருப்பூரில் தொடர் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் அவைத் தலைவர் நாசர் உமரி, அவர்கள் தனக்கே உரித்தான உருது தமிழ் ஆகிய இரு மொழிகளிலும்
கண்டன உரையாற்றினார்

குடியுரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடந்த தொடர்தர்ணா போராட்டத்தில் ஆண்கள் பெண்கள் என ஆயிரக் கணக்கானோர் திரண்டனர்.

இப்போராட்டத்தில் அனைத்து அமைப்புகள், கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் ஹைதர் அலி, மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது, மாவட்ட துணைச் செயலாளர்கள் முஜிபுர் ரகுமான், ராயல் பாட்ஷா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அஸ்கர், துணைச்செயலாளர் அபு, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நெளஃபல் ரிஸ்வான், மாவட்ட பொருளாளர் ஆசீக், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் காதர்கான்,மற்றும் கிளை, நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பூர்_மாவட்டம்
21.02.2020