பிப்.22.,
குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து கோவை செல்வபுரம் அனைத்து கூட்டமைப்பு சார்பில் கண்டன பொதுக்கூட்டம் கூட்டமைப்பு தலைவர் MA.காதர், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை TA.நாசர், அவர்கள் கண்டன உரையாற்றினார்.
இதில் பொள்ளாச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம், கருத்தாளர் நாஞ்சில் சம்பத், அய்யா தர்மயுக வழிப்பேரவை தலைவர் அய்யாவழி பால முருகன், தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் கு.இராம கிருஷ்ணன், திருச்சி உலமா சபை முஹம்மது சிராஜிதீன் மன்ப ஈ, ஆகியோரும் கண்டன உரையாற்றினர்.
இதில் பல்வேறு இயக்கங்கள், சமூக அமைப்புகள், ஜமாத் நிர்வாகிகள், மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலளர் கோவை சம்சுதீன், IKP, மாவட்ட செயலாளர் ஹனீப், மருத்துவ அணி மாவட்ட துணை செயலாளர் ஹக்கீம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் EBR.இப்ராஹிம், சேட்டு, பூ.அபு, இளைஞரணி முன்னாள் மாவட்ட செயலாளர் PMA.பைசல், முன்னாள் பகுதி செயலாளர் பூ காஜா உசேன், 77வது வார்டு செயலாளர் பயாஸ், பொருளாளர் அலி, 78 வது வார்டு செயலாளர் ஜாஹிர், பொருளாளர் சுபேர், துணை செயலாளர்கள் பீர்முகம்மது, அபு, நவ்பல், மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.
இப்பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.
தகவல்
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவைமாநகர்மாவட்டம்
22.02.2020