மஜக மதுரை மாவட்ட ஆலோசனைகூட்டம்..!

மதுரை.ஜனவரி.15..,

மனிதநேய ஜனநாயக கட்சியின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று (14-01-2020) மாலை நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், மாநில துணை பொதுச் செயலாளர் மன்னை செல்லசாமி ஆகியோர் பங்கேற்று மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள், கிளைகளை கட்டமைப்பது, தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது ஆகியன குறித்து நிர்வாகிகள் மத்தியில் கலந்தாலோசனை நடத்தினர்.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஒத்தக்கடை பாருக், மதுரை மாவட்டப் பொருளாளர் சசிகுமார், மாவட்ட துணைச் செயலாளர்கள் பென்ஸ் மோகன், சுலைமான், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பாட்ஷா, மாவட்ட வர்த்தகர் அணிச் செயலாளர் இப்ராஹிம், மாவட்ட தொழிலாளர் அணிச் செயளாளர் பஷீர் அகமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் மஜீத் மேலும் புதூர் கனி, ஹிதாயதுல்லா, உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மதுரை_மாவட்டம்.
14-01-2020