மாயவரம். ஜனவரி-15,
மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக வடகரை-அரங்குடியில் கூட்டமைப்பு சார்பில் அரங்குடியில் கவன ஈர்ப்பு பேரணி தொடங்கி வடகரை பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மஜக-வின் கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை A.T. நாசர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மேலும், பேரா.த.ஜெயராமன், S.நவாஸ்கான் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
போராட்டக்காரர்கள் தேசிய கொடிகளுடனும், No CAA,NPR,NRC பதாகைகளை ஏந்திய வாரும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியவாரு பேரணியில் பங்கேற்றனர்.
இப்போராட்டத்தில் மஜக மாவட்ட செயலாளர் N.M.மாலிக், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜஹான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் நீடுர் ஜெப்ருதீன், செம்பை ஒன்றிய மு.செயலாளர் நிஜாமுதீன், வடகரை-அரங்ககுடி கிளை பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு சமூக நல இயக்க, கட்சிகளின் நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகைவடக்குமாவட்டம்.
14/01/2020