தொண்டி.நவ.2., இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தலைமையாசிரியர் மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட ஏழு ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் பணி இடமாற்றம் பெற்று சென்றுவிட்டனர். +1 , +2 ஆகிய வகுப்புகளுக்கு பாடம் நடத்துவதற்க்கு கூட ஆசிரியர்கள் இல்லை.
நிலைமையை உணர்ந்து உடனடியாக மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் அது குறித்து மாவட்ட கல்வி அலுவலரின் பார்வைக்கு எடுத்து சென்றும் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை.
இதை கண்டித்து மஜக இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
இந்நிலையில் கடந்த 31-10-2018 அன்று ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரி மாணவிகளின் போராட்டத்தை ஒருங்கிணைத்து அப்போராட்டத்தை மஜக முன்னின்று நடத்தியது. அதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைப் பொதுசெயலாளர் மண்டலம் ஜெய்னுல் ஆபிதின் தலைமையில் மஜக நிர்வாகிகள் மாணவிகளின் போராட்டத்திற்க்கு பக்கபலமாக நின்றார்கள்.
அங்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் பிரேம், தாசில்தார் சாந்தி, மற்றும் பிற அரசு அதிகாரிகளிடம் மஜக நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக 8 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள்.
மேலும் பள்ளிக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் விரைவில் செய்து தருவதாகவும் அரசு தரப்பு அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்ததை அடுத்து மாணவிகளின் போராட்டம் கைவிடப்பட்டது.
ஆசிரியர் நியமனம் பெற்று தந்த மனிதநேய ஜனநாயக கட்சியினருக்கு மாணவிகளின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#இராமநாதபுரம்_கிழக்கு_மாவட்டம்.