கோவையில் சாலையோர கடைகள் அகற்றம்! மஜகவின் முயற்சியால்மீண்டும் கடைகள் அமைப்பு!!

கோவை:அக்.31. கோவை பெரியகடை வீதி போத்தீஸ் கார்னர் அருகே மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கதிற்கு உட்பட்ட நடைபாதை வியாபாரிகள் பிரிவு சார்பிலும் மற்றும் அங்குள்ள சிறு வியாபாரிகள் சேர்ந்து கடைகள் அமைத்து பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகின்றனர்.தற்போது அங்கு கடைகள் அமைக்கக்கூடாது என காவல்துறை உத்தரவிட்டு கடைகளை அகற்றியது .தகவலறிந்த மஜக நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.அதை தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகளை தொடர் கொண்டு பேசினர் அதில் சுமூக தீர்வு ஏற்படவே மீண்டும் அங்கு வியாபாரிகள் சார்பில் கடைகள் அமைக்கப்பட்டன.இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், இளைஞரணி மாவட்ட செயலாளர் பைசல், மத்திய பகுதி செயலாளர் பூ.காஜா, மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.கடைகள் அமைக்க மீண்டும் அனுமதி பெற்று தந்ததற்காக மஜக நிர்வாகிகளுக்கு வியாபாரிகள் சார்பாக நன்றி தெரிவித்தனர்.தகவல்மஜக தகவல் தொழில் நுட்ப அணி#MJK IT WINGகோவை மாநகர் மாவட்டம்31.10.18