You are here

கேரள மக்களுக்கு மஜக சார்பில் வெள்ள நிவாரண நிதி திரட்டும் பணிகள் தீவிரம்..! கோட்டைப்பட்டினம் கடை வீதியில் நிதி திரட்டிய மஜகவினர்..!!

புதுகை.ஆக.16., புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், கோட்டைப்பட்டினத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் கேரளா மலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டும் பணியில் மஜகவினர் கடைவீதியில் இறங்கினர்.

கடை வீதியெங்கும் மக்கள் தன்னார்வமாக நிதி திரட்டும் பெட்டிகளில் தங்களால் இயன்ற பங்களிப்பினை வாங்கியவுடன், இந்த தன்னலமற்ற பணியினை வெகுவாக பாராட்டினர்.

இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொறுப்பாளர் கோட்டை ஹாரிஸ், MJTS மாவட்ட செயலாளர் ஷாஜி தீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் கான் உட்பட மனிதநேய சொந்தங்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிதி திரட்டும் முகாம் தலைமை அறிவித்த தன் பெயரில், இன்னும் மூன்று தினங்கள் தொடரும்..

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்

Top