துக்ளக் சோ மரணம் மஜக தலைவர்கள் நேரில் மரியாதை…

image

டிச.07., துக்ளக் ஆசிரியர் சோ காலமானதையொட்டி அவரது வீட்டில் இருந்த உடலுக்கு மஜக பொதுச்செயலாளர்
M. தமிமுன் அன்சாரி MLA தலைமையில் பொருளாலர்
S. ஹாரூண் ரசீது, மாநிலச் செயலாளர் சாதிக் பாட்ஷா ஆகியோர் சென்று பார்வையிட்டு மரியாதை செய்தனர்.

பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பொதுச்செயலாளர் பேசியதாவது;

ஐயா சோ அவர்களின் அரசியலின் மீது எங்களுக்கு மாற்றுக்கருத்துகள் உண்டு. அவரது பாஜக சார்பு அரசியலை நாங்கள் விமர்சித்து வந்திருக்கிறோம். அதே நேரம் அவர் இந்துத்துவ வன்முறைகளை எதிர்த்திருக்கிறார்.

1992 டிசம்பர் 6_ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டப் போது அதை கண்டித்ததோடு, அத்வானி போன்றவர்கள் இப்படி செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றார். தனது கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் அந்த வார துக்ளக்கின் அட்டைப் படத்தை கருப்பாக வெளியிட்டு கோபத்தை வெளிப்படுத்தினார். தலையங்கத்தில் கடுமையாக அச்சம்பவத்தை கண்டித்தார்.

அவர் துக்ளக் பத்திரிக்கையை ஆபாசம், கிசுகிசு இல்லாமல் நடத்தினார். பளப்பான அட்டை போடாமல், வழவழப்பான தாள் இல்லாமல் கருத்துகளை மட்டுமே நம்பி இத்துணை ஆண்டுகாலம் நடத்தியது ஆச்சர்யம். அதை வாங்குபவர்கள் முதலில் தலையங்கத்தையும், கேள்வி-பதிலையும்தான் பாடிப்பார்கள்.

அவர் பத்திரிக்கையாளர், நாடக நடிகர், சினிமா நடிகர் என்பதையெல்லாம் தாண்டி அரசியலில் பல ஆட்சி மாற்றங்களையும், அரசியல் மாற்றங்களையும் உருவாக்கியவர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அவரை இழந்து வாடும் துக்ளக் வாசகர்களுக்கும், உறவினர்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல்;
மஜக ஊடகப் பிரிவு.
மஜக ஊடகப் பிரிவு(சென்னை)