பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சென்னையில் பேரணி…! மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு..!!

சென்னை. ஜூன்.08., சுதந்திர பாலஸ்தீனத்தை வலியுறுத்தியும், ஜெருருசலத்தில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதை மூடக்கோரியும், வலியுறுத்தி சென்னையில் ‘தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாத்’ சார்பில் ஜூம்மா தொழுகைக்கு பிறகு இன்று பேரணி நடைப்பெற்றது.

உலகம் முழுக்க ரமளானில் கடைசி வெள்ளிக்கிழமை அன்று ‘#அல்குத்ஸ்’ என்ற பெயரில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நிகழ்வுகள் நடைப்பெற்று வருகின்றன.

இவ்வருடம் சென்னையில் கடும் வெயிலில், நோன்போடு பெரும் திரளான மக்கள் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அணிதிரண்டனர்.

இதில் பங்கேற்று #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA பேசினார்.

பாலஸ்தீனம் எங்களின் உரிமை பூமி, புனித பைத்துல் முக்கத்தஸ் எங்களுடையது. ஜெருசலம்தான் சுதந்திர பாலஸ்தீனத்தின் தலைநகராகும். அங்கு இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை திறந்ததை ஏற்க முடியாது. உலகிலேயே பயங்கரவாத தேசம் என்றால் அது இஸ்ரேல்தான். அது பாலஸ்தீன குழந்தைகளையும், பெண்களையும் கொன்று குவிப்பதை ஐ.நா. வேடிக்கைப் பார்க்கிறது. வடகொரியா, ஈராக், சிரியா, ஈரான் போன்ற நாடுகளில் மூக்கை நுழைக்கும் அமெரிக்கா, இஸ்ரேலை மட்டும் பாதுகாக்கிறது.

இந்திய அரசு காந்தியடிகளின் வழியில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

இஸ்ரேலை எதிர்க்க ஷியா, சன்னி, தவ்ஹீத் என்ற மஸாயில், அகீதா பேதங்களை கடந்து அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பொதுச் செயலாளருடன் மாநில துணைச் செயலாளர் ஷமிம் அஹமது, மத்திய சென்னை மாவட்ட செயாளர் பிஸ்மி, வட சென்னை நிர்வாகி அன்பு உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_மத்திய_சென்னை_கிழக்கு
08.06.18