குடியாத்தம்.மார்ச்.26., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் குடியாத்தம் தொகுதியில் போட்டியிடும் திருமதி.அமலு அவர்கள் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மஜகவினருடன் சேர்ந்து தீவிர வாக்குகளை சேகரித்தார், இதில், மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயலாளர் S.அனீஸ் தலைமையில் நகர துணை, அணி மற்றும் பல்வேறு நிர்வாகிகள் திரளாக பங்கேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #TNElection2021 #MJK2021 #குடியாத்தம்_சட்டமன்ற_தொகுதி_தேர்தல்_பணிக்குழு 26-03-2021
Month:
சத்தியமங்கலத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மஜகவினர்!
ஈரோடு:மார்ச்.26., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பவானி சாகர் தொகுதியில் போட்டியிடும் சுந்தரம், அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு கேட்டு சத்தியமங்கலம் ராஜீவ் நகர், புதிய மார்க்கெட், கொங்கு நகர், பகுதிகளில் தோழமை கட்சிகளுடன் சேர்ந்து மஜக வினர் வாக்கு சேகரித்தனர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சத்தியமங்கலம் நகர செயலாளர் சலீம், அவர்கள் தலைமையில் மஜக-வினர் திரளானோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #MJK2021 #TNElection2021 #பவானி_சாகர்_சட்டமன்ற_தொகுதி_தேர்தல்_பணிக்குழு 26.3.2021
சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் மஜகவினர்!
கோவை:மார்ச்.26., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் நா.கார்த்திக், அவர்கள் போட்டியிடுகிறார். அதனைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை சிங்காநல்லூர் பகுதியில் பள்ளிவாசலில் மஜக வினர் உடன் இணைந்து அவர் வாக்கு சேகரித்தார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சிங்கை சுலைமான், அவர்கள் தலைமையில் மாவட்ட, சிங்கை கிளை நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #MJK2021 #TNElection2021 #சிங்காநல்லூர்_சட்டமன்ற_தொகுதி 26.03.2021
நாகப்பட்டினத்தில் பரப்புரை தொடக்கம்.. விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ்க்கு மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA வாக்கு சேகரிப்பு!
மார்ச்.26, மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று நாகப்பட்டினத்திலிருந்து பரப்புரையை தொடங்கினார். நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்கு கேட்டு ஆதலையூரில் வாக்கு சேகரித்தார். விரைவில் நாகை நகராட்சியிலும் பரப்புரை மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்தார். ஏப்ரல் 04 அன்று கோவையில் அவரின் பரப்புரை நிறைவடைவதாக பரப்புரை சுற்றுப்பயணம் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்றைய பரப்புரையில் வேட்பாளர் ஷாநவாஸ் அவர்களும் பங்கேற்றார். இதில் மஜக மாநில துணை செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ்தீன், பொருளாளர் சதக்கத்துல்லாஹ், துணை செயலாளர் முன்சி யூசுப்தீன், திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன், குவைத் மண்டல துணை செயலாளர் பாசில், மாவட்ட அணி நிர்வாகிகள் IT Wing நிசாத், ஆதினங்குடி சாகுல், பேபி ஷாப் பகுருதீன், முத்து, ஒன்றிய துணை செயலாளர் பாவா, ஆதலையூர், ஏனங்குடி, கேதாரிமங்கலம், வவ்வாலடி, பாக்கம் கோட்டூர் கிளை நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தேர்தல்_பணிக்குழு, #நாகப்பட்டினம்_சட்டமன்றத்தொகுதி. #MJKitWING #TNElection2021
பாபநாசம் தொகுதியில் பேரா ஜவாஹிருல்லாவிற்கு ஆதரவாக; மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன்ரசீது வாக்கு சேகரிப்பு!
மார்ச்.26, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பாபநாசம் சட்டமன்ற தொகுதி மமக வேட்பாளர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் விற்கு இன்று மஜகவினர் ஆதரவு திரட்டினர். இதன் ஒருபகுதியாக அம்மாப்பேட்டை ஜீம்ஆ பள்ளிவாசலில் தொழுகைக்கு வந்தவர்களிடம் வேட்பாளருடன் இணைந்து வாக்கு சேகரித்தனர். மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது தலைமையில் துணை பொதுச் செயலாளர் மன்னை செல்லசாமி, கொள்கை விளக்கக் அணி துணை செயலாளர் காதர் பாட்சா, மருத்துவ சேவை அணி துணை செயலாளர் முஹம்மது மஃரூப் உள்ளிட்டோர் பங்கேற்று வாக்கு சேகரித்தனர். இதில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சேக் முஹம்மது அப்துல்லாஹ், தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் அஹமது கபீர், துணைச் செயலாளர் முகைதீன், பாபநாசம் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி, அம்மாப்பேட்டை ஒன்றிய பொறுப்பாளர் ஆசிப் ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தேர்தல்_பணிக்குழு, #பாபநாசம்_சட்டமன்றத்தொகுதி. #MJKitWING #TNElection2021