மே 24, வட அமெரிக்கா தமிழக முஸ்லிம் சங்கத்தின் ஏற்பாட்டில் ZOOM காணொளி வழியே கருத்தரங்கம் நடைப்பெற்றது. அதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு... https://m.facebook.com/story.php?story_fbid=2488261874606906&id=700424783390633 புலம் பெயர்ந்து சென்றாலும், தமிழ் உணர்வோடு நீங்கள் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தாயகத்தின் வாழும் மக்களின் துயர் துடைக்க இந்நிகழ்ச்சியின் வழியாக கொரணா நிவாரண நிதியை வசூலிப்பதும் பாராட்டத்தக்கது. இந்திய நேரம் விடியற்காலை 2:30 மணிக்கு இந்நிகழ்ச்சியை தொடங்கி உள்ளோம். அமெரிக்காவில் 3 வகையான நேர மாற்றங்கள் உள்ளது. இப்போது கலிபோர்னியாவில் பகல் 2 மணியாகவும், நியுயார்க்கில் மாலை 5 மணியாகவும் உள்ளது. ஆனாலும் பொது சேவைக்காக நேரம் பாராது கூடியுள்ளோம். தமிழகத்தில் இதுவரை ஐந்தாயிரம் குடும்பங்களுக்கு நீங்கள் உதவியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்நிகழ்வில் நிலாபுதீன், அமெரிக்க தமிழ் வானொலியின் நெறியாளர் ஆறுமுகம் பேச்சுமுத்து, தோப்புத்துறை நூர்தீன், கார்த்திக் பெருமாள், அபுபக்கர், அப்துல்லா ஜெகபர்தீன் என பலரும் கூடியிருப்பது நமது பண்பாட்டின் சிறப்பாகும். இது தமிழ்நாட்டிற்கே உரியதாகும். தமிமுன் அன்சாரிக்கு கொள்கை உண்டு. மார்க்கம் உண்டு. மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் என்பவர் சமூகநீதியாளர் ஆவார். நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர்