திருச்சி.நவ.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ARS.அஸ்ரப்அலி தலைமையில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சரும், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வெல்லமண்டி N.நடராஜன் அவர்களை சட்டமன்ற அலுவலகத்திற்கு நேரில் சென்று கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவில், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காஜா மியான் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 700 மாணவ/மாணவிகள் படித்து வருகின்றனர்.அம்மாணவர்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும், ஆரோக்கியமான எதிர்காலத்தை கவனத்தில் கொண்டும் இப்பள்ளிக்கு தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை (RO) ஏற்படுத்தி தர வேண்டும். என கோரிக்கை வைத்தனர். மனுவை கனிவுடன் பெற்றுக்கொண்ட அமைச்சர் அவர்கள் காஜா மியான் மேல்நிலைப்பள்ளிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைத்து தர தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு, ஒருவார கால அவகாசத்தில் உங்கள் கோரிக்கையினை நிறைவேற்றி தருவதாக மஜக மாவட்ட நிர்வாகிகளிடம் உறுதி அளித்தார். முன்னதாக,பள்ளி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் வசதி தொடர்பாக கோரிக்கையினை மாவட்ட நிர்வாகிகளிடம் வைத்திருந்தனர். இச்சந்திப்பின் போது மாவட்ட பொருளாளர் மைதீன் அப்துல் காதர் மாவட்ட துனைச்செயலாளர்கள் SM.ரபீக்,சேக்தாவூத்,பக்கீர்மைதீன்,தர்ஹா பாரூக்