டிச.25, தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரையில், மனிதநேய ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் அல்அமீன் ஜூம்ஆ பள்ளிவாசல் அருகில் நடைப்பெற்றது. மாவட்ட செயலாளர் சேக் தலைமையில் நடைப்பெற்ற இம்முகாமில் திரளானோர் பங்கேற்று உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர். இதில் நகர துணை செயலாளர்கள் அஸ்கர், மர்ஜூக், 11 வது வார்டு பொருளாளர் அஜிஸ் உள்ளிட்டோர் இம்முகாமிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_தெற்கு_மாவட்டம்.
உறுப்பினர் சேர்க்கை
தஞ்சாவூரில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்!
டிச.25, மனிதநேய ஜனநாயக கட்சி 75 நாட்கள் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் டிச.31 அன்று நிறைவடைய உள்ள நிலையில் இன்று தஞ்சை கீழவாசலில் மஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. அத்தர் ஜமாஅத் பள்ளிவாசல் அருகில் மஜக தஞ்சை மாநகர செயலாளர் அப்துல்லா தலைமையில் நடைப்பெற்ற இம்முகாமில் திரளானோர் பங்கேற்று உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர். இதில், தஞ்சை மாநகர துணைச் செயலாளர் சாகுல் அமீது, 30, 31,14 வது வார்டு செயலாளர்கள் நிஜாமுதீன், முகமது காமில் உள்பட மஜகவினர் திரளானோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_மாநகர்_மாவட்டம்.
கறம்பக்குடியில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்! துணைப் பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி பங்கேற்பு!!
டிச.24, கடந்த அக்.17 அன்று தொடங்கிய மஜகவின் 75 நாட்கள் தீவிர உறுப்பினர் சேர்க்கை நிகழ்வுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. எதிர்வரும் டிச.31 தேதியை இலக்காக கொண்டு தமிழகமெங்கும் நூற்றுக்கணக்கான முகாம்கள் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கட்சியில் புதிய உறுப்பினராக இணைந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மஜக சார்பில் உறுப்பினர் அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இன்று புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் கறம்பக்குடியில் நடைப்பெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் நகர செயலாளர் ஆசை அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. மஜக துணைப் பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி மற்றும் மாநில துணைச் செயலாளர் துரைமுஹம்மது ஆகியோர் பங்கேற்று முகாமை துவக்கி வைத்து முதற்கட்ட அடையாள அட்டையை வழங்கினர். இளைஞர்கள் உள்ளிட்ட பலர் தங்களை ஆர்வமுடன் மஜகவின் உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர். இதில், மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான், பொருளாளர் ரஹீம்தாலிஃப், துணைச்செயலாளர் லெட்சுமணன், விவசாய அணி செயலாளர் சலீம், நகர நிர்வாகிகள் ரபியுதீன், சிராஜூதீன், நகர அணி செயலாளர்கள் முஹம்மது மன்சூர், சையது இப்ராகிம் உள்ளிட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #புதுக்கோட்டை_மேற்கு_மாவட்டம்.
மஜக மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்.! துணை பொதுச்செயலாளர் NA தைமிய்யா தொடங்கி வைத்தார்..!
சென்னை.டிச.21., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் மத்திய சென்னை கிழக்கு மாவட்டம், சேப்பாக்கம் பகுதி சார்பாக நடைபெற்றது. உறுப்பினர் சேர்க்கை முகாமை மஜக துணை பொதுச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா தொடங்கிவைத்தார், உடன் மீனவரணி மாநில செயலாளர் பார்த்திபன் உடனிருந்தார். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் உறுப்பினர் படிவங்களில் கையொப்பமிட்டு தங்களை மஜக-வில் இணைத்து கொண்டனர். இந்நிகழ்வில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான், சேப்பாக்கம் பகுதி செயலாளர் தாஜுதீன், சேப்பாக்கம் பகுதி பொருளாளர் மொய்தீன் உள்ளிட்ட வார்டு, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்டத்தில் தொகுதிவாரியாக தீவிர உறுப்பினர் சேர்க்கைக்கான முகங்கள் நடத்துவதற்கான பணிகளை மஜக-வினர் முன்னெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #மத்தியசென்னை_கிழக்கு_மாவட்டம் 20-12-2020
நாகை தொகுதி திருமருகலில் மஜகவில் இணைந்த இளைஞர்கள்! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் இணைந்தனர்!!
டிச.21, நாகை தொகுதியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று விட்டு வவ்வாலடி வருகை தந்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., முன்னிலையில் அவ்வூரை சேர்ந்த இளைஞர்கள் தங்களை ஆர்வமுடன் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்து கொண்டனர். முன்னதாக பாக்கம் கோட்டூரில் திருமண நிகழ்வில் பங்கேற்க வருகை தந்த பொதுச்செயலாளர் முன்னிலையில் திருமருகல் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர். இதில், மாநில துணை செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ், மாவட்ட துணை செயலாளர் முன்ஷி யூசுப்தீன், MKP குவைத் மண்டல துணை செயலாளர் பாசில், MJVS மாவட்ட பொருளாளர் பேபிஷாப் பகுருதீன், MJTS மாவட்ட துணைச் செயலாளர் சாகுல் மற்றும் திருமருகல் பிரவீன், வவ்வாலடி அலி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம். 20/12/2020