பெரம்பலூர்:ஆக.15., 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக் குடிக்காட்டில் தேசிய கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் தாளம்பாடி முஜிப் ரஹ்மான், அவர்கள் தேசிய கொடியேற்றி வைத்து உறுதி மொழி வாசித்தார். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர்கள் தமிமுன் அன்சாரி, அப்துல் ரஹ்மான், முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆசப் ராஜா, முன்னாள் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ஹக்கீம் பாட்ஷா, மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #பெரம்பலூர்_மாவட்டம் 15-08-2020
இஸ்லாமிய கலாச்சார பேரவை
74வது சுதந்திரதினம்.!தென்காசி மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் சார்பில் கொடியேற்று விழா!!
தென்காசி:ஆக.15., இந்திய தேசத்தின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க பிரிவான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் சார்பில் தேசிய கொடியேற்று விழா மாவட்ட தலைவர் ரவி ,அவர்கள் தலைமையில் நடைபெற்றது . இந்நிகழ்வில் தென்காசி மாவட்டச் செயலாளர் பீர் மைதின், அவர்கள் தேசிய கொடியேற்றி வைத்தார். சமூக இடை வெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முகம்மது இப்ராஹிம், மாவட்ட துணைச் செயலாளர் பொன்னானி அபுதாஹீர், மாவட்ட துணை செயலாளர்கள் வாவை இனாயத்துல்லா, ஆதம்பின் ஹனிபா, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட தொழிற்சங்க பொருளாளர் மகேஷ், இளைஞரணி மாவட்ட செயலாளர் முஹம்மது இஸ்மாயில், தொழிற்சங்க நகரத் தலைவர் அபுபக்கர், மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தென்காசி_மாவட்டம் 15-08-2020
74வது சுதந்திரதினம்.!தென்காசியில் மஜக சார்பில் கொடியேற்று விழா!!
தென்காசி:ஆக.15., 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி தென்காசி மாவட்டம் சார்பில் தேசிய கொடியேற்று விழா மாவட்ட துணைச் செயலாளர் பொன்னானி அபுதாகிர், அவர்கள் தலைமையில் நடைபெற்றது . இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முகமது இப்ராஹிம், அவர்கள் தேசிய கொடியேற்றி வைத்தார். சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் பீர் மைதீன், மாவட்ட துணை செயலாளர் வாவை இனாயத்துல்லா, மாவட்ட துணைச் செயலாளர் ஆதம் பின் ஹனிபா, இளைஞரணி மாவட்ட செயலாளர் முகமது இஸ்மாயில், தொழிற்சங்க மாவட்ட தலைவர் ரவி, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, தென்காசி நகர பொருளாளர் முகமது கனி, நகர துணைச் செயலாளர்கள் காஜாஷரிப், சிக்கந்தர், நகர இளைஞரணி செயலாளர்அலி, நகர மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல் ரஹ்மான், நகர தொழிற் சங்க தலைவர் அபுபக்கர், மாணவர் இந்தியா ஒன்றிய செயலாளர் முஸ்தபா, நகர மாணவர் இந்தியா செயலாளர் மாலிக், மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தென்காசி_மாவட்டம் 15-08-2020
74வது சுதந்திரதினம்.!கோவையில் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் சார்பில் தேசிய கொடியேற்று விழா!!
கோவை:ஆக.15., 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க பிரிவான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் (MJTS) சார்பில் உக்கடம் புல்லுக்காடு, குறிச்சி பிரிவு, குனியமுத்தூர், போத்தனூர் ஆகிய இடங்களில் தொழிற் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் உசேன், அவர்கள் தலைமையில் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அன்சர் பாஷா, தெற்குப் பகுதி செயலாளர் காஜா உசேன், ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, உறுதிமொழி ஏற்ற பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ATR. பதுருதீன், ABT.பாருக், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜுதீன், தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் சமது, ஜாகிர் உசேன், அன்சர், இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் சதாம் உசேன், வணிகர் சங்க பொருளாளர் நெளபல் பாபு, வணிகர் சங்க துணைச் செயலாளர் ஹாரூன், தெற்கு பகுதி தொழிற்சங்கச்
74வது சுதந்திரதினம்!! மஜக கோவை மாநகர் மாவட்ட கிணத்துகடவு பகுதியில் தேசிய கொடியேற்றி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி!!
கோவை:ஆக.15., 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாய கட்சி கோவை மாநகர் மாவட்டம் கிணத்துக்கடவு பகுதி குறிச்சி பிரிவு கிளை செயலாளர் சலாம், அவர்கள் தலைமையில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் குறிச்சி பிரிவு இட்டேரி பகுதியில் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ் அவர்களும், ஆத்துப்பாலம் பகுதியில் மாவட்ட துணை செயலாளர் ATR. பதுருதீன், அவர்களும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உறுதிமொழி ஏற்றனர், பின்பு பொது மக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் இனிப்புகளை வழங்கினர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் M.H.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ABT.பாருக், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜுதீன், தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் சமது, ஜாகிர் உசேன் அன்சர், இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர் பாஷா, இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் சதாம் உசேன், வணிகர் சங்க பொருளாளர் நோபில் பாபு, வணிகர் சங்க துணைச் செயலாளர் ஹாரூன்,கிணத்துக்கடவு பகுதி துணை செயலாளர் அக்பர் அலி,