உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்கும்பூரில் #பாஜக மற்றும் அவர்களின் ஆதரவு கும்பலால் #விவசாயிகள் திட்டமிட்டு கொல்லப்பட்டிருப்பது நாடெங்கிலும் அதிர்ச்சியையும், கிளர்ச்சியையும் உருவாக்கியிருக்கிறது. அதுவும் விவசாயிகளை திட்டமிட்டு வாகனம் ஏற்றி சொல்லும் வீடியோ காட்சிகள் வலைதளங்கள் மூலம் பரவி கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது இச்சம்பவத்திற்கு தமிழகத்தில் மனித நேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் கடும் கண்டத்தை வெளிப்படுத்தின. உ.பி.யில் சமாஜ்வாடி கட்சியும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பலைகளை உருவாக்க, கம்யூனிஸ்ட் கட்சிகளும் களமிறங்கியுள்ளன. இதனிடையே தமிழக விவசாயிகளின் இதயப் பகுதி என கருதப்படும் டெல்டாவில், மனிதநேய ஜனநாயக கட்சி விவசாயிகளை அணிதிரட்டும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. முன்னோட்டமாக ஒன்றுபட்ட டெல்டா வின் தலைநகரான தஞ்சாவூரில் இரங்கல் நிகழ்வை முன்னெடுத்துள்ளது. உ.பி.யில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவித்து இன்று தஞ்சை ரயிலடியில் ° அலைப்பேசி விளக்குகளை எரியவிட்டு "இரங்கல் நிகழ்வு நடைபெற்றது. இதற்கு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டு, விவசாய சங்க பிரதிநிதிகளும் வருகை தந்திருந்தனர். அனைவர் கரங்களிலும் ஃபாசிஸ்ட்டுகளை கண்டிக்கும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தினாலான பதாகைகளை தூக்கி நின்றனர். குறுகிய கால ஏற்பாட்டிலும், பெண்களும்
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக கோவை வடக்கு மாவட்ட சிறப்பு நிர்வாககுழு கூட்டம்! MJTS மாநில செயலாளர் ஜாபர்அலி பங்கேற்பு!
மனிதநேய ஜனநாயக கட்சி கோவை வடக்கு மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் R.முஹம்மது அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் M.சுல்தான், முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக MJTS, மாநில செயலாளர் M.H. .ஜாபர் அலி அவர்கள் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தில் IKP யின் சார்பில் முன்னெடுக்கப்படும் போதைக்கு எதிரான பரப்புரைக்கு ஆதரவு தெரிவித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது, மேலும் கட்சியின் சார்பில் கொடியேற்று விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது நிவாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் M.காஜாமைதீன், S.உமர்பாரூக் R.யாசர் அரபாத், A.ஷேக் மைதீன், இளைஞரணி மாவட்ட செயலாளர் M.ஆரீப் அப்பாஸ், மாவட்ட செய்ற்குழு உறுப்பினர்கள் SMR. பாரி, MEB.ஹக்கீம், ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_வடக்கு_மாவட்டம் 03.10.2021
மனிதநேயம் காப்போம்! புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பொதுக்குழுவில் மஜக மாநில பொருளாளர் ஹாரூன் ரசீது பேச்சு!
மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் கறம்பக்குடியில் மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். இதில் பேசிய மாநில பொருளாளர் மஜக வின் பணிகள் மற்றும் கடந்து வந்த பாதை களை சுட்டிக்காட்டி மஜக வினர் உயிர் தியாகத்திலும் மனிதநேயம் மற்றும் ஜனநாயகம் காப்பவர்கள் என்று பேசினார். அதை தொடர்ந்து தலைமை ஒருங்கிணைப்பாளர் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். மேலும் மாநில துணைச்செயலாளர் துரை முஹம்மது, விவசாய அணி மாநில செயலாளர் பேரை அப்துல் சலாம், ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். முன்னதாக நிகழ்ச்சியை தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், கொடி ஏற்றி துவக்கி வைத்தார்கள். இதில் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி, விவசாய அணி மாநில துணை செயலாளர் ஷேக் இஸ்மாயில், தலைமை செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட துணைச்செயலாளர் லெட்சுமணன் அவர்கள் வரவேற்புரை நிழ்த்தினார். மக்கள் நலன் சார்ந்த
தஞ்சையில் மத நல்லிணக்க உறுதிமொழியேற்பு… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!
காந்தியடிகளின் 183-வது பிறந்த தினத்தையொட்டி, இன்று தஞ்சாவூரில் மத நல்லிணக்க உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றார். இதில் காங்கிரஸ் CPM, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, மஜக, அகில இந்திய கிருத்தவ கூட்டமைப்பு, முஸ்லிம் லீக், MMMK, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். மஜக மாநில துணைச் செயலாளர் வல்லம் அகமது கபீர், மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட பொரு லாளர் M.அப்துல்லா, மாவட்ட துணைச் செயலாளர் சேட்டு (எ) ஹபிபுர் ரஹ்மான், மாநகர பொறுப்பாளர்கள் காமில், சாகுல், ஜாகீர் உள்ளிட்டவர்களும் இதில் பங்கேற்று உறுதி மொழி ஏற்றனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தஞ்சை_மாநகர்_மாவட்டம் 02.10.2021
சென்னை அமைந்தகரையில் அஸ்ஸாம் அரச பயங்கரவாதத்தை கண்டித்து பதாகை ஏந்தி மஜக ஆர்ப்பாட்டம்! துணை பொதுச்செயலாளர் தைமிய்யா பங்கேற்பு.!!
அஸ்ஸாம் மாநிலம் சிபாஜ்ஹார் என்ற இடத்தில் 30 ஆண்டுகளாக குடியிருந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை அங்கிருந்து விரட்ட அரச பயங்கரவாதத்தை ஏவிய பாஜக மாநில அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின், மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் அமைந்தகரை MMDA பால்பூத் அருகில் பதாகை ஏந்திய ஆர்ப்பாட்டம் அண்ணாநகர் பகுதி செயலாளர் அ.அஸ்லாம் பாஷா தலைமையில் நடைப்பெற்றது. ஆர்பாட்டத்தில் மஜக மாநில துணை பொதுச்செயலாளர் N.A.தைமிய்யா பங்கேற்று அஸ்ஸாம் மாநில பாஜக அரசை கண்டித்து கண்டன உறையாற்றினார். அவருடன் மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ், இளைஞரணி மாநில செயலாளர் அசாருதீன், மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர் ஆகியோர் பங்கேற்று கண்டன கோஷம் எழுப்பினர். இதில் மஜக மாவட்ட துணை செயலாளர் பக்கீர் மைதீன் உள்ளிட்ட மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டு தங்களது எதிர்பை பதிவு செய்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #மத்தியசென்னை_மேற்கு_மாவட்டம் 01-10-2021