மார்ச்:01., மனிதநேய ஜனநாயக கட்சியின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடி நாள் அறிவிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் கொடியேற்று விழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக தஞ்சை வடக்கு மாவட்ட குடந்தையில் கொடியேற்ற விழா மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட், கலந்து கொண்டு கொடியேற்றினார் மேலும் மாற்று திறனாளி ஒருவருக்கு வீல் சேர் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் இப்ராஹிம், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் முகம்மது யாசின், ஒன்றிய செயலாளர்கள் இப்ராஹிம், சாதிக் பாட்ஷா, சோழபுரம் வர்த்தக அணி பொருளாளர் சலீம், உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை குடந்தை மாநகர செயலாளர் ராஜ்முகம்மது மாவட்ட துணை செயலாளர் சோழபுரம் பாரூக் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-IT-WING தஞ்சை வடக்கு மாவட்டம் 28.2.2022
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
ஆவடியில் மஜக ஏழாம் ஆண்டு துவக்க விழா!
மார்ச்:01.,மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கொடிநாள் அறிவிக்கப்பட்டு மாவட்டமெங்கும் கொடியேற்று விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு நிகழ்வாக திருவள்ளுர் மேற்கு மாவட்டம் ஆவடியில் மஜக வின் கொடியேற்று விழா மாநகர செயலாளர் சாகுல் அமீது அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ், அவர்கள் கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் அக்பர் உசேன், மாவட்ட துணை செயலாளர் பசீர் அகமது தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் இலியாஸ், இளைஞரணி மாவட்ட செயலாளர் கலிமுல்லா, மாநகர பொருளாளர் நாகூர் மீரான், மாநகர துணை செயலாளர் தேவகாந்தி பாபு, உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல், மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-IT-WING திருவள்ளூர் மேற்கு மாவட்டம் 28.02.2022
பொள்ளாச்சியில் மஜக ஏழாம் ஆண்டு துவக்க விழா! கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
மார்ச்:01.,மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் மஜக வினர் கொடியேற்றுதல், இரத்ததானம் வழங்குதல், ஆதரவற்றோருக்கு உணவு வழங்குதல், போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக மஜக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கொடியேற்றுவிழா நடைபெற்றது. நிகழ்வில் பொள்ளாட்சி நகர செயலாளர் ராஜா ஜெமீஷா, அவர்கள் கலந்து கொண்டு கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில் நகர துணை செயலாளர்கள் அன்சார், அப்துல் காதர், MJVS நகர தலைவர் ச.அஷரப் அலி, MJTS நகர செயலாளர் முகமது உசேன், MJTS நகர செயலாளர்கள் வசந்த் கிருஷ்ணன் MJVS நகர செயலாளர் அபுபக்கர் சித்தீக், MJVS நகர பொருளாளர் சீராஜ்தீன், 15 வது வார்டு செயலாளர் அப்பாஸ், ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி செயலாளர் சாதிக் அலி, பேரூராட்சி பொருளாளர் செந்தில் குமார், பேரூராட்சி துணைசெயலாளர் மன்சூர், சுலைமான், நஃவ்பில், முகமது பஷீர் அப்ரித், சாமிநாதன், முகமது உசேன்(பூ) சர்தார், ஜஹாங்கீர், பக்ரூதீன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-IT-WING பொள்ளாச்சி நகரம் கோவை மாவட்டம் 28.02.2022
மனிதநேயம் பேசிய மாணவருக்கு மாணவர் இந்தியா பாராட்டு..! விருது கேடயத்தினை வழங்கினார் மஜக பொ.செ. மு.தமிமுன் அன்சாரி..!!
சென்னை.மார்ச்.01., சென்னை சாந்தோம் லாசரஸ் பள்ளி மாணவர் அப்துல் கலாம் அவர்கள் மனிதநேயம் குறித்தும், அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்வது குறித்தும் பேசிய காணொளி இணையதளங்களில் பெரும் வரவேற்பைப்பெற்றது. மனிதநேயத்தை போற்றிய மாணவன் அப்துல் கலாமுக்கு "மாணவர் இந்தியா" சார்பாக "இளம் அப்துல் கலாம்" விருதினை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வழங்கி பாராட்டினார். அவரது குடும்பத்தின் நலன் கருதி தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அவர்களுக்கு வீடு வழங்கியதற்கு மாணவர் இந்தியா சார்பாக புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர் அஹமது உடனிருந்தார். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-it-WING மத்தியசென்னை மாவட்டம் 28.02.2022
கோவையில் மஜக 7ஆம் ஆண்டு துவக்க விழா!! ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கிய மஜக வினர்!!
மார்ச்:01., மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகமெங்கும் கட்சிக் கொடி ஏற்றுதல், ரத்த தானம் வழங்குதல், ஆதரவற்றோருக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக கோவையில் உள்ள பேரூர் அன்பு இல்லத்தில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் M.H. அப்பாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அங்குள்ள முதியோர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியினர் உணவு வழங்கி பரிமாறினர். மேலும் அவர்களை நலம் விசாரித்து அவர்களுக்கான தேவைகளை குறித்தும் கேட்டறிந்தனர். மேலும் அதன் தொடர்ச்சியாக அவர்களின் தேவைகளை மஜக வினர் செய்து கொடுப்பதாக அன்பு இல்ல நிர்வாகிகளிடம் கூறினர். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் சிங்கை சுலைமான், ஹனிஃபா, விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர், மாவட்ட பொருளாளர் பைசல் ரகுமான், மாவட்ட துணைச் செயலாளர் சையது, மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் சபிக், மாணவர் இந்தியா மாவட்டச்செயலாளர் மன்சூர், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜுதீன், செல்வபுரம் பகுதி பொறுப்பாளர் கமால், தெற்குப் பகுதி பொருளாளர் நௌஷாத்,