பிப்ரவரி:28., மனிதநேய ஜனநாயக கட்சியின் ஏழாம் ஆண்டு தொடக்க விழாவை யொட்டி இன்று தமிழகமெங்கும் மஜக சார்பில் கொடி நாள் என அறிவிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் கட்சி கொடி ஏற்றும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக செங்கை வடக்கு மாவட்ட பல்லாவரம் கண்டோன்மெண்ட் , பகுதிகளில் கொடியேற்று விழா மாவட்ட செயலாளர் ஜாகிர், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில துணை செயலாளர் பல்லாவரம் ஷபி, அவர்கள் பங்கேற்று கட்சி கொடியை தொண்டர்களின் எழுச்சி முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் அப்துல் சமது, பல்லாவர நகர செயலாளர் ஷா.நவாஸ், யாசின் கான், மாவட்ட அணி நிா்வாகிகள் பைசுல்லா, ஷேக் மீரான், நடுவீரபட்டு ஜாகீா், பல்லாவரம் நகர பொருளாளா் முஸ்தாக், மற்றும் நகர நிா்வாகிகள் ஜகீா்பாஷா, அக்பா் அலி, அஷ்ரப், சுலைமான், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல், மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-it-WING செங்கை வடக்கு மாவட்டம் 28.02.2022
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
கறம்பக்குடியில் மஜக 7ம் ஆண்டு கட்சி துவக்கவிழா கொடியேற்று நிகழ்ச்சி..!
பிப்ரவரி 28 :கறம்பக்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 7 ம் ஆண்டு துவக்க விழா மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி கறம்பக்குடி நகர அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாநில துணைப்பொதுச்செயலார் நாச்சிக்குளம் தாஜூதீன் அவர்கள் பங்கேற்று கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார் மேலும் இந்த நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட,ஒன்றிய,நகர நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், மாற்று கட்சியை சேர்ந்த தோழமைகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர் முன்னதாக பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன முடிவில் நகர செயலாளர் ஆசை அப்துல்லா நன்றி கூறினார்... தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி புதுகோட்டை மேற்கு மாவட்டம் 28.2.2022
மஜக தர்மபுரி மாவட்ட செயற்குழு கூட்டம்.!
பிப்:27.,மனிதநேய ஜனநாயக கட்சியின் தர்மபுரி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளா் அப்ரார் பாஷா, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் ஈரோடு பாபு ஷாஹின்ஷா கலந்து கொண்டு கட்சியின் 7ஆம் ஆண்டு தொடக்க விழா குறித்தும், நகர, ஒன்றிய கிளைகளை, அதிகப்படுத்துவது குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-IT-WING தர்மபுரி மாவட்டம் 27.02.2022
ஆதிநாதன் ஆணையம் இதுவரை எடுத்த முயற்சிகள் என்ன?கோவை பிரகடனத்தின் 50ஆம் நாளையொட்டி!! மஜக பொ.செ.மு.தமிமுன் அன்சாரி அறிக்கை!
பிப்:27.,பத்து ஆண்டுகளை நிறைவு செய்த பிறகும்,தமிழக சிறைகளில் வாடும் ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தி வருகிறது. பல ஜனநாயக சக்திகளும் இதற்கு ஆதரவாக திரண்டதால், இக்கோரிக்கை மக்கள் மயமாகியிருக்கிறது. கடந்த ஜனவரி 8, அன்று இக் கோரிக்கையை முன்னிறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆயிரக் கணக்கான மக்களுடன் கோவை சிறை முற்றுகை போராட்டத்தை நடத்தினோம். அரசியல் சாசன சட்டத்தின் 161 வது பிரிவு இது குறித்து மாநில அரசுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை தமிழக அரசு பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், தமிழக அரசின் நல்ல முடிவுக்காக 100 நாட்கள் காத்திருப்பது என்று அந்த போராட்டத்தில் பிரகடனம் செய்திருந்தோம் இன்றோடு 50 நாட்கள் நிறைவடைந்திருக்கிறது. இவர்களின் விடுதலை குறித்து ஆராய தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதியரசர் ஆதிநாதன், தலைமையிலான ஆணையம் இதுவரை எடுத்த முன் முயற்சிகள் என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை. அக்குழு முறையாக கூடி ஆலோசித்ததாக கூட தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. எனவே இந்த ஆணையத்தை செயல்பட வைத்து,தமிழக அரசு இவ்விவகாரத்தில்
மஜக கோவை மாவட்ட சிறப்பு நிர்வாக குழு கூட்டம்..!
பிப்ரவரி: 26.,மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கட்சியின் 7ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ரத்த தானம் முகாம் மற்றும் கொடியேற்று விழா நடத்துவது குறித்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், ஹனிஃபா, விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் ஹாரூன், மாவட்ட பொருளாளர் நோபல் பாபு, இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர், மாவட்ட துணைச்செயலாளர் சையது, மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் சபீக், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் பாதுஷா, தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜ்தீன், மற்றும் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல், மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-IT-WING கோவை மாநகர் மாவட்டம். 25.02.2022.