மஜகவின் தமிழர் திருநாள் வாழ்த்து செய்தி..!

image

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் வாழ்த்து செய்தி…)

பசும் வயல்கள் சூழ்ந்த மருத நிலத்தை பெருபான்மையாக கொண்டது நமது தமிழ்நாடு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே திருவள்ளுவர் அவர்கள் “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்” என்று விவசாயத்தை உயர்வுப்படுத்தி கூறினார்.

விவசாயத்தை செம்மைப்படுத்தும் மண், மழை, கால் நடைகள் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தொன்மை காலத்தில் தமிழர்கள் முன்னெடுத்த வழிபாடுகளற்ற நாகரீகம்தான் பொங்கல் திருநாள் என்றும் தமிழர் திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது. இதனை அறுவடை திருநாள் என்றும் சொல்வதுண்டு.

விவசாயம் மூலம் பொருளாதாரம் குவியும் காலம் இது என்பதால்தான் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்றார்கள்.

தமிழர் பண்பாடுகளை எடுத்துரைக்கும் இத்திருநாளில் இயற்கை விவசாயத்தை வளர்க்கவும், தண்ணீர் மேலாண்மை ஒழுங்குப்படுத்தவும், சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் உறுதி ஏற்போம்.

தமிழர் திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்;
M.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்.
மனிதநேய ஜனநாயக கட்சி,
13.01.2018.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*