ஜெருசலேம் பாலஸ்தீனியர்களுகே உரிமை!

image

(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு)

முஸ்லிம்கள், கிருஸ்தவர்கள், யூதர்கள்  ஆகிய மூன்று சமூகத்தினரின் புனிதப் பகுதியாக கருதப்படும் ஜெருசலேம் பாலஸ்தீனத்தின் தலை நகராக இருக்க வேண்டும் என்ற வரலாற்று போராட்டம் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மோசமான முடிவால் ஒரு திருப்புமுனையை சந்தித்திருக்கிறது.

இஸ்ரேலின் தலைநகராக இருக்கும் டெல் அவிவ் இனி மாநகராக மட்டுமே இருக்கும். இஸ்ரேலின் தலைநகராக  இனி ஜெருசலேம் தான் இருக்கும் என ட்ரம்ப் முட்டாள் தனமாக செய்திருக்கும் அறிவிப்பு உலகை பற்றியெறிய செய்திருக்கிறது.

அமெரிக்க தேர்தலின் போது யூதர்களின் வாக்குகளை பெற அவர் கொடுத்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றியிருக்கிறார்.

இதனால் உலகமெங்கும் வாழும் முஸ்லிம்களும், கிருஸ்தவர்களும்  யூத சியோனிஸ கொள்கை அரசியலுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து போராடுகிறார்கள்.

வாடிகன் போப் பிரான்ஸிஸ் ஜான்பால் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், இப்பிரச்சனையை  இதற்கு மேல் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது என எச்சரிக்கின்றார். ஜெருசலேம் விவகாரத்தில் பழைய நிலையே தொடர வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறும் போது இதனால் மத்திய கிழக்கின் அமைதி முயற்சிகள் பாதிக்கப்படும் என்றிருக்கிறார்.

அதுபோல ரஷ்யா, வடகொரியா, சவுதி, ஜெர்மனி, பிரான்ஸ், சீனா, ஸ்வீடன், ஏமன், ஈராக், எகிப்து, துருக்கி, பொலிவியா, இத்தாலி, உருகுவே, உள்ளிட்ட பல நாடுகள் அமெரிக்காவின் முடிவை கடுமையாக எதிர்த்திருக்கின்றன.

அமெரிக்காவின் முடிவு கவலையளிப்பதாக ஐரோப்பிய யூனியன் கருத்து தெரிவித்திருக்கிறது.

கடந்த 1948-ல் நடைபெற்ற அரபு -இஸ்ரேலிய போரின்போது இஸ்ரேல் ஜெருஸலத்தை  ஆக்கிரமித்து. அதன் பிறகு முஸ்லிம்களுக்கும், கிருஸ்த்தவர்களுக்கும் பல கெடுபிடிகளை யூத – இஸ்ரேலிய அரசு விதித்தது.

இவ்விஷயத்தில் உலக நாடுகள் இஸ்ரேலை ஒதுக்கி  வைத்திருக்கும் நிலையில்,  அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் சர்வாதிகார முடிவு நெருப்பை கொட்டியிருக்கிறது.

அல் – அக்ஸா எனும் முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத்தலம் அமைந்திருக்கும் ஜெருஸலம், அனைத்து மக்களின் ஆன்மீக பூமியாகவும் திகழ்கிறது.

அதனை ஒரு சார்பு உடைமையாக்க துடிக்கும் இஸ்ரேல், அமெரிக்க கூட்டு அராஜகத்தை உலகநாடுகள் ஒன்று சேர்ந்து கண்டித்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஐக்கிய நாட்டு சபையில் உலக நாடுகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு  அமெரிக்கா அதிபர் டிரம்பின் முடிவை நிராகத்திருப்பது சர்வதேச அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாகும்.

மூன்றாம் உலக போருக்கு அமெரிக்கா சர்வாதிகாரி டிரம்ப் துணை போவதாக அமெரிக்காவிலேயே எதிர்ப்புகள் வலுத்திருப்பது ஒரு ஆரோக்கியமான போக்கு என்பதில் ஐயமில்லை.

வடகொரியா விசயத்திலும் டிரம்பின் வெறித்தனமான பேச்சுகளை யாரும் விரும்பவில்லை.

அமெரிக்காவை உலக அரங்கில் தலைகுனிய செய்யும் டிரம்பின் முடிவுகள் அமெரிக்க மக்களாலையே திருத்தப்பட வேண்டும்.

இந்தியா தனது மெளனத்தை உடைத்து, காந்தியடிகளின் வழியில், இந்தியாவின் மரபு சார் அரசியல் கொள்கைப்படி சுதந்திர பாலஸ்தினத்திற்கு ஆதரவாக தொடர்ந்து வெளிப்படையாக குரல் கொடுக்க வேண்டும்.

இவண் :
#M_தமிமுன்_அன்சாரி_MLA
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி