தமிழக முதல்வருடன் மஜக பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி MLA சந்திப்பு..! முத்தலாக் சட்டம், மீனவர் பிரச்சனை குறித்து பேச்சு..!!

image

சென்னை.டிச.08.,தமிழக முதல்வர் திரு எடப்பாடியார் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், அவரது  கீரீன்வேஸ் சாலை இல்லத்தில் நேற்று இரவு சந்தித்தார்.

முத்தலாக் குறித்து மத்திய அரசு கொண்டுவர உள்ள விரைவு சட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று மஜகவின் சார்பில் முதல்வரிடம் கடிதத்தை கொடுத்தார்.

அதைப் படித்துப் பார்த்த  முதல்வர் நிச்சயமாக தமிழக அரசு சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று உறுதியளித்தார்.

அடுத்து கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அங்கு நடைபெறும் போராட்டங்களை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் மஜக பொதுச் செயலாளர் கூறினார்.

இதுகுறித்து முதல்வர்
தமிழக அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருவதாகவும் கூறினார்.

தற்போது குஜராத்தில் ஓகி புயலால் கரை  ஒதுங்கியுள்ள குமரி மாவட்ட மீனவர்களை விரைவில் தமிழகத்திற்கு கொண்டு வரவேண்டும் என்றும், அவர்கள் திரும்பி வர ஒரு படகிற்க்கு  750 லிட்டர் டீசல் வழங்கப்படும் என அரசு அறிவித்ததை 1500 லிட்டர் டீசலாக உயரத்தித் தர வேண்டும் என்றும், அவர்களுக்கு  நபர் ஒன்றுக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டதை கூடுதலாக உயர்த்தித் தர வேண்டும் என்றும், பொதுச்செயலாளர் முதல்வரிடம் எடுத்து கூறினார்.

இவை அனைத்தும் கவனத்தில் கொள்வதாகவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் முதல்வர் கூறினார்.

மேலும் நீதிபதிகள் நியமனம் IAS, IPS பணிகளில் ஆள் எடுப்பு ஆகியவை அனைத்திலும் சமுதாயத்தினருக்கும், உரிய இட ஒதுக்கீடும், சமூகநீதி பேணப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முதல்வரிடம் எடுத்துரைத்தார்.

இது தவிர நாகப்பட்டினம் வர்த்தக துறைமுகத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

பொதுச்செயலாளருடன் மஜக மாநில  செயலாளர்கள் N.A.தைமியா, A.சாதிக் பாஷா, மாநில துணை செயலாளர்கள்
J.M.வசீம் அக்ரம், ஷமீம் மற்றும் இளைஞர் அணி மாநில துணை செயலாளர் அன்வர் ஆகியோரும் உடன் இருந்தார்கள்.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்
08.12.2017