திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி..! மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு..!!

திருவாரூர்.ஜூலை.21., மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக் அவர்கள் தலைமையில் எடையூர்-சங்கந்தி பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று மஜக கொடியை கட்சியின் பொதுச்செயலாளரும் நாகப்பட்டிணம் சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஏற்றிவைத்து சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இதில் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்களும், கத்தார் மண்டல துணை செயலாளர் சமீர், பஹ்ரைன் மண்டல ஆலோசகர் முகமது ஜான், முத்துப்பேட்டை நகர செயலாளர் தக்பீர் நெய்ணா முகம்மது, நாச்சிகுளம் ஜமாத் முன்னால் தலைவர் ஹாஜி M.M. அப்துல் சுக்கூர், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்

முன்னதாக எடையூர் சங்கந்தி ஜமாத்தார்களும், சங்கேந்தி முன்னால் ஊராட்சிமன்ற தலைவர் மனோகர் அவர்களும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகளும் பெருந்திரளாக கலந்துகொண்டு மஜகவின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார்கள்.

இக்கொடியேற்று நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மஜக எடையூர்-சங்கந்தி கிளை நிர்வாகிகள் அன்வர்,தமீம் அன்சாரி, தௌலத் முகம்மது, ரேடார் தாவூத், முகம்மது இக்பால் ஆகியோர் சிறப்பான முறையில் செய்திருந்தனர்

திருத்துறைபூண்டி, கட்டிமேடு, முத்துப்பேட்டை, நாச்சிகுளம் ஆகிய ஊர்களிலிருத்து பெரும்திரளான தொண்டர்கள் வாகனப்பேரணியாக வந்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருவாரூர்_மாவட்டம்.