நவ.29, இன்று ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, சேலம் மாவட்ட மஜக நிர்வாகிகளை சந்திப்பதற்காக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் ஈரோடு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:- "இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை முன்னின்று நடத்தியவர் தான் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்க்ஷே! அவர் தனக்கு வாக்களிக்காத கோபத்தில் ஈழ தமிழர்கள் வாழுமிடங்களில் ஆயுதம் தாங்கிய படை வீரர்களை நிறுத்தி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழர் பகுதிகளில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. அப்படியிருக்கும் போது, ஏன் இந்த இராணுவ ரோந்து? அங்கு மொழி மற்றும் மத சிறுபான்மையினர் சம அளவில் நடத்தப்பட வேண்டும். இந்தியாவின் புவிசார் அரசியல் நலன் கருதி அவரை இந்தியாவுக்கு வரவழைத்திருக்கிறார்கள். இதை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறும் நிலையில், பிரதமர் மோடி அவர்கள், இலங்கை வாழ் தமிழ் பேசும் சகல மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் குறித்து ராஜபக்க்ஷேவிடம் வலியுறுத்த வேண்டும். சென்னை IIT யில் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் மாணவி பாத்திமாவின் மர்ம மரணம் குறித்த விசாரணையில் இதுவரை உயர் சாதி சமூகத்தவர் என கூறப்படும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
You are here
Home > Posts tagged "மு.தமிமுன் அன்சாரி MLA பேட்டி!"