டிச 22, மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் (MMMK ) சார்பில் நெல்லை மாவட்டம் , மேலப்பாளையத்தில் மத்திய அரசின் கறுப்புச் சட்டங்களை கண்டித்து கண்டன பொதுக் கூட்டம் , நிறுவன தலைவர் பாளை. ரபீக் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., பங்கேற்று உரையாற்றினார். நாடெங்கிலும் நடைபெறும் போராட்டங்களையும்,கிளர்ச்சிகளையும் துப்பாக்கி முனையில் ஒடுக்க முடியாது என்றும், காரணம் இது குடியுரிமைக்கான போராட்டம் என்றும், இதில் சமரசத்திற்கு இடமில்லை என்றார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை மூளை வீங்கி என்று கூறியவர், அதிமுகவின் இன்றைய தலைமை , பொன்மனச் செம்மல் MGR, டாக்டர் ஜெயலிலதா அம்மா ஆகியோரின் கொள்கைகளுக்கு எதிராக செல்கிறது என்று குற்றம் சாட்டினார். இதனால் அதிமுகவின் தொண்டர்களில் பெரும்பாலோர் வேதனையில் உள்ளனர் என்றும் கூறினார்.. ஜனநாயகம் காக்க,நாடு முழுக்க மதங்களை, சாதிகளை கடந்து மக்கள் போராடுகிறார்கள். இப்போது படைப்பாளிகள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் திரை கலைஞர்கள், பத்திரிக்கையாளர்கள் என எல்லோரும் களத்தில் குதித்ததால், போராட்டம் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டதாகவும், இந்த கறுப்பு சட்டங்களை திரும்ப பெற்றால் மட்டுமே, நாட்டில் அமைதி திரும்பும் என்று திட்டவட்டமாக கூறினார். மத்திய அரசு
You are here
Home > Posts tagged "முதமிமுன் அன்சாரி MLA காட்டம்!"