ஏப்ரல்.09, நாகை புதிய பேருந்து நிலையம் மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகளுக்கு சென்று மு.தமிமுன் அன்சாரி MLA ஆய்வு மேற்கொண்டார். அவருடன் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் உமா மகேஸ்வரி, நகராட்சி ஆணையர் ஏகராஜ் ஆகியோரும் உடன் சென்றனர். அங்கு வணிகர்களிடமும், பொதுமக்களிடமும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும், முக கவசம் அணியுமாறும் வலியுறுத்தினார். பிறகு நகராட்சி ஆணையர் ஏகராஜிடம், நடமாடும் காய்கறி கடை குறித்தும் கேட்டறிந்தார். 130 ரூபாய் மதிப்புள்ள காய்கறி பை 100 ரூபாய்க்கு வீதிகளுக்கு சென்று விற்கப்படுவதாகவும், இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் அவர் கூறினார். பிறகு அங்கு மற்றொரு பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் இறைச்சி மற்றும் கோழிக் கடைகளுக்கும் சென்று , அங்கு தூய்மை ஒழுங்கை அவசியம் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பிறகு பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து பூ மற்றும் காய்கனி வணிகர்களையும் சந்தித்து பேசினார். தொடர்ந்து பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கும் சென்று, அங்கு பணியாற்றும் தன்னார்வலர்களையும் சந்தித்து பாராட்டினார். இதில் ஷேக் அஹ்மதுல்லா, முரளி, லவ்லி யூசுப், இஸ்மத், மகேஷ், கண்ணன் ஆகியோரும் உடன் சென்றனர். தகவல், நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். https://m.facebook.com/story.php?story_fbid=2382901811809580&id=700424783390633
You are here
Home > Posts tagged "முதமிமுன்அன்சாரிMLA"