நெல்லை.பிப்.3.., நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் ஜமாத்துல் உலமா சார்பில் மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இதில மவ்லவி T.J.M.சலாவுதீன் ரியாஜி, தோழர் வே.மதிமாறன், அ.ச.உமர் பாரூக், மவ்லவி இல்யாஸ், பாளை.ரபீக் ஆகியோர் உரையாற்றினர். இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசிய உரையின் முக்கிய பகுதிகள் பின் வருமாறு... நாடெங்கிலும் மக்கள் போராட்டம் அமைதியாகவும், எழுச்சியாகவும் நடைப்பெற்று வருகிறது. இதை திட்டமிட்டு குலைக்க சிலர் நினைக்கிறார்கள். ஜனவரி-30 அன்று டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸ் கண்ணெதிரிலேயே கோபால் என்பவர் துப்பாக்கியால் சுட்டு மாணவர்களை காயப்படுத்தியுள்ளார். அவரை கைது செய்த காவல்துறை அவர் 2002-ல் பிறந்த மைனர் என்று கூறி தப்பிக்க வழி செய்கிறது. அவரது தந்தை 2000-ல் இறந்து விட்டதாக ஆவணங்கள் கூறுகிறது. அப்படியெனில் எது உண்மை? நேற்று 40 நாட்களுக்கும் மேலாக டெல்லி ஷாஹின் பாத்தில் அமைதியாக காத்திருப்பு போராட்டம் நடத்தும் மக்கள் மீது ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார். இவர்களுக்கு பின்னால் இருக்கும் சக்தி எது? துப்பாக்கிகள் எங்கிருந்து கிடைக்கிறது? கள்ள துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலைகள் எங்கு உள்ளது? முகநூலில் கருத்து
You are here
Home > Posts tagged "முதமிமுன்அன்சாரி MLA கோரிக்கை..!!"