நவ.29, மதுரை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த திண்டுக்கல் மீரான் மைதீன் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் மன்னை.செல்லசாமி தலைமையில் சந்தித்த மஜக மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். மஜக பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களின் கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு தமிழக அரசு அடுத்தடுத்து பரோல் வழங்கியது. தற்போது ராபர்ட் பயாகக்கும் பரோல் வழங்கியுள்ளது. நேற்று, இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட திண்டுக்கல் மீரான் மைதீனை முன் விடுதலை செய்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் பல்வேறு சமூக மக்களின் கோரிக்கைகளை தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களின் கவனத்திற்கு எடுத்து சென்று தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதற்கு பொதுச் செயலாளரை அழைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு மீரான் மைதீன், தனது நன்றிகளை தெரிவித்து கொண்டார். இந்நிகழ்வில் மதுரை மாவட்ட செயலாளர் மைதீன்பாபு, மாவட்ட பொருளாளர் சசிக்குமார், மாவட்ட துணை செயலாளர் மோகன், மாவட்ட அணி நிர்வாகிகள் கேபிள் பாட்ஷா, இப்ராஹிம், கனி, பிரித்வி, ஒத்தக்கடை சுலைமான், கார்த்திக் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #மதுரை_மாவட்டம்.
You are here
Home > Posts tagged "மீரான்மைதீனை"