மாணவர் இந்தியா சார்பாக ஆண்டு தோறும் காந்தி படுகொலையை கண்டித்து பயங்கரவாத எதிர்ப்பு நாள் சிறப்பு கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு சென்னை ராயபுரத்தில் நடைப்பெற்ற இக்கருத்தரங்கம் மாநில தலைவர் ஜாவித் ஜாஃபர் அவர்களது தலைமையில் தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கப்பட்டது. மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளன்று சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களது எண்ண ஓட்டங்களை உரையில் உணர்ச்சிகரமாக பதிவு செய்து மாணவர் இந்தியாவின் இந்த கருத்தரங்கம் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். எழுத்தாளர் தியாகு,பேராசிரியர் சுந்தரவள்ளி ஆகியோர் காந்தி எப்படிப்பட்ட இந்தியா உருவாகிவிடக்கூடாது என்று நினைத்தாரோ அப்படிப்பட்ட இந்தியா அமைய தற்போது நடக்கும் சங்பரிவார அமைப்புகளின் சதித்திட்டங்களை மாணவர்களுக்கு விளக்கினர். மாணவர் இந்தியா பொறுப்பாளர் தைமியா சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றார் முன்னாள் மாணவர் இந்தியா நிர்வாகிகள் அணீஸ்,ஷமீம்,அஸாருதீன் கருத்தரங்கம் நோக்கத்தை விளக்கி உரையாற்றினர். மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர் அவர்களது தலைமையில் மாநில செயலாளர் பெரியார் கார்த்தி,ஊடக பிரிவு செயலாளர் கார்த்தி அடங்கிய கலைக்குழு குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கொள்கை முழக்கங்களை எழுப்ப அரங்கமே
You are here
Home > Posts tagged "மாணவர் இந்தியா"