வேலூர்:பிப்.21., குடியுரிமை திருத்த சட்டங்களை (CAA, NRC, NPR,) திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரியும், வேலூரில் தொடர் முழக்க தர்ணா போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில அவைத்தலைவர் எஸ்.எஸ்.நாசர் உமரி, மாநில இணை பொதுச்செயலாளர் மெளலவி J.S.ரிபாய் ஆகியோர் கலந்து கொண்டு குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்தும் கண்டன உரையாற்றினார்கள். இதில் மஜக மாநில துணை செயலாளர் S.G.அப்சர் சையத் வேலூர் மாவட்டச் செயலாளர் A.முஹம்மத் யாசின், மாவட்ட பொருளாளர் I.S.முனவ்வர் ஷரிப்,மாவட்ட துணை செயலாளர்கள் ஜாகீர் உசேன்,சையத் உசேன் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மாவட்டம் 17.02.2020
Tag: மஜகதலைமைநிர்வாகிகள்_பங்கேற்பு..!
மஜக வட மேற்கு மண்டல ஆலோசனை கூட்டம்..! மஜக தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு..!
வேலூர்: பிப்.16., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக எதிர்வரும் பிப்.29 அன்று "கோவையில்" தமிழகம் தழுவிய அளவில் மக்கள் ஒன்று கூடும் வாழ்வுரிமை மாநாடு குறித்து, வேலூர் திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வட மேற்கு மண்டல ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்டச் செயலாளர் முஹம்மத் யாசின் தலைமையில் நடைபெற்றது. இதில் மஜக அவைத்தலைவர் S.S.நாசர் உமரி, இணை பொதுச் செயலாளர் J.S.ரிபாய், மாநில துணைச் செயலாளர் S.G.அப்சர் சையத் ஆகியோர் பிப்ரவரி 29-ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாழ்வுரிமை மாநாட்டு பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள். மேலும் வேலூர் மாநாகர நிர்வாக கட்டமைப்பும் புதியதாக அமைக்கப்பட்டது. இதில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மாவட்டம் 16.02.2020