#மஜகசார்பில்ஈரோட்டில்தடையைமீறி_ஆர்ப்பாட்டம்!! ஈரோடு:டிச.13., மத்திய அரசு பாரபட்சத்துடன் நிறைவேற்றிய புதிய குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து மனிதநேய ஜனநாயக கட்சி ஈரோடு கிழக்கு மாவட்டத்தின் சார்பில் சுல்தான் பேட்டை பள்ளிவாசல் அருகே மாநில துணைச் செயலாளர் பாபு ஷாகின்ஷா, அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஈழத்தமிழர்களுக்கு அண்டை நாடுகளிலிருந்து வரும் இந்திய வம்சாவளி முஸ்லிம்களுக்கு நேபாளத்திலிருந்து வரும் கிறிஸ்தவர்களுக்கு புதிய குடியுரிமை சட்டத்தில் குடியுரிமை வழங்குக என்பது போன்ற முழக்கங்கள் எழுப்பினர் மேலும் சட்ட நகலை கிழிக்க முற்பட்டபோது காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதில் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் சபிக் அலி, மாவட்ட பொருளாளர் முகமது அலி, மாவட்ட துணைச் செயலாளர் முஹம்மது முஸ்தபா, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிராஜ், பகுதி செயலாளர் பாபு, பஷீர், அப்துர்ரஹ்மான், பக்கீர் முஹம்மது, சபர் அலி, உள்ளிட்ட திரளான மஜக நிர்வாகிகளும் மற்றும் ஜமாத்தார்களும் பங்கேற்றனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #ஈரோடுகிழக்குமாவட்டம் 13.12.19
You are here
Home > Posts tagged "மஜகசார்பில்ஈரோட்டில்தடையைமீறி_ஆர்ப்பாட்டம்"