புதுக்கோட்டை.டிசம்பர் 15.., மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்த்து மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் கறம்பக்குடி பேருந்து நிலையம் எதிரில் இன்று மாபெரும் கண்டன போராட்டம் மாவட்டச் செயலாளர் முஹம்மது ஜான் தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தின் போது மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து ஈழ தமிழர்களையும், அண்டை நாட்டு இந்திய வம்சாவளி முஸ்லிம்களையும், நேபாளத்திலிருந்து வரும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்டவர்களையும் புதிய குடியுரிமை சட்டத்தில் குடியுரிமை வழங்க வேண்டும் ஆகிய முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த போராட்டத்தில் ஜமாத்தார்கள், CPI (ML) கட்சியின் தோழர்கள், ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர் நெடுவாசல் திருமுருகன் மற்றும் சகோதர சொந்தங்கள், மஜக மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தகவல்:- #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #புதுக்கோட்டை_மேற்கு 15-12-2019
You are here
Home > Posts tagged "புது குடியுரிமை சட்ட மசோதா"