ஜன.22, நெய்வேலியில் கூட்டமைப்பு சார்பில், குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்தும், மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கிய விளக்க பொதுக்கூட்டம் அண்ணாதிடலில் ஹாஜி.சா.சுல்தான் முகைய்தீன் தலைமையில் எழுச்சியோடு நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பங்கேற்று மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கெதிராக எழுச்சிமிகு கண்டன உரை நிகழ்த்தினார். பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் தனது உரையில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மதங்களை கடந்த நல்லிணக்கத்தோடு நடைப்பெறும் சம்பவங்களை பட்டியலிட்டவர், மதங்களை கடந்து குடியுரிமை சட்டத்திற்கெதிரான போராட்டத்தை மக்கள் நடத்தி வருவதாகவும், அவ்வகையில் நாமும் இப்போராட்டத்தை எவ்வித சாயமும் இன்றி பாதிக்கப்படும் இந்திய மக்களுக்காக நல்லிணக்கத்தோடு ஒன்றிணைந்து இப்போராட்டங்களை கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், தி.வேல்முருகன், ஹாஜாகனி, சிந்தனைச்செல்வன், சர்புதீன்ஷெரீப் உள்ளிட்ட தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிட நெய்வேலி இபுராஹிம் ஒருங்கிணைக்க ஹாஜி.M.அப்துல் ரஹீம் நன்றிக் கூறினார். இதில், மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இபுராஹிம், மாவட்ட துணைச் செயலாளர்கள் யாசின், ரியாஸ் ரகுமான், சலீம், நெய்வேலி டவுன் ஷிப் செயலாளர் ரியாஸ் மற்றும் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஜாகீர் ஹூசைன் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் மாவட்ட அணி, ஒன்றிய, நகர, கிளை
You are here
Home > Posts tagged "நெய்வேலி"