ஜன.20, நாகூரில், அம்பேத்கார் மக்கள் புரட்சி மன்றம் ஒருங்கிணைத்த குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் தர்கா அலங்கார வாசலில் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் மஜக சார்பில் துணைப் பொதுச்செயலாளர் தைமிய்யா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கையில் தேசிய கொடியேந்தி போராட்டக்காரர்கள் தரையில் அமர்ந்து அடையாள தர்ணாவில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், பல்வேறு கட்சி, அமைப்பு , சமூக நல இயக்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்று தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். இதில், மஜக மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், நாகூர் நகர செயலாளர் அபுசாலி சாஹிப், மஹ்மூது இபுராஹீம் மற்றும் நகர நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைதெற்குமாவட்டம். 19/01/2020
You are here
Home > Posts tagged "தைமிய்யாபங்கேற்பு!"