சென்னை.மார்ச்.6, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது.., தமிழக அரசின் எட்டாம் வகுப்பு பாடத் திட்டத்தின் மூன்றாம் பருவ சமூக அறிவியல் புத்தகத்தில் இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக கருத்து பிழை உள்ளது. மூன்றாம் பருவ சமூக அறிவியல் பாடத்தில் பக்கம் 157-ல் பெண்களின் நிலை என்ற பாடம் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடத்தில் ஆங்கிலேயர் காலத்தில் பல சங்கங்கள், சமய அமைப்புகள் பெண்களின் சீர்திருத்தத்திற்கு முயற்சித்ததாகவும் அதனைத் தொடர்ந்து 158-ஆவது பக்கத்தின் முதல் பத்தியில் பர்தா அணியும் முறையிலிருந்து வெளியேறுதல் ஆங்கிலேயர் காலத்தில் சமூக சீர்திருத்தமாக குறிப்பிட்டுள்ளனர். இஸ்லாமிய பெண்கள் அவர்களது மார்க்கம் வழங்கும் சுய அங்கீகாரமாகவும், பாதுகாப்பிற்காகவும் விரும்பி அணியும் பர்தாவை பாடநூலில் தவறாக சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த கருத்துப் பிழையை பாடத்திட்டத்திலிருந்து உடனடியாக நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த ஓரு வருடங்களாக பல்வேறு தவறான கருத்துகளை பாடத்திட்டத்தில் இடம்பெறுவது வருத்ததிற்குரியதாக உள்ளது. தற்போது உள்ள பாடநூல் அமைப்பு குழுவை கலைத்து தகுதியான குழுவை வரும் காலங்களில் அமைத்திட வேண்டுகிறோம் என்று அக்கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING 06-03-2020
You are here
Home > Posts tagged "சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் உள்ள கருத்துபிழை"