டிச 14., மத்திய அரசு தற்போது பாரபட்சத்துடன் நிறைவேற்றியுள்ள புதிய குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பொதுமக்களும் கல்லூரி மாணவர்களும் தன்னெழுச்சியாக போராட தொடங்கியுள்ளனர். டெல்லி அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் புரட்சி வெடித்துள்ளது. இந்திய மதச்சார்பின்மைக்கு வேட்டு வைக்கும் இந்த சட்டத்திருத்தத்தை திரும்ப பெறக்கோரியும். இந்திய வம்சாவளி முஸ்லிம்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கக் கோரியும். கோவை வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் VMT.ஜாபர், அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் R.முஹம்மது அப்பாஸ், அவர்கள் கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட பொருளாளர் ரபிதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமைதீன், மாவட்ட துணை செயலாளர்கள் யாசர் அராபத், உமர்பாருக், பாரி, கோகுல், மற்றும் திரளானோர் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_வடக்கு_மாவட்டம் 14.12.19
You are here
Home > Posts tagged "கோவை மஜக"