தமிழக முதல்வர் அம்மா அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மொத்த தமிழகமும் வேதனையில் ஆழ்ந்தது.
கட்சிகளுக்கும், கருத்து வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டு அனைவரும் அவர் உடல் நலம் பெற வேண்டும் என வாழ்த்தினர், பிரார்தித்தனர்.
பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அரசியல் வேறுபாடின்றி மருத்துவமனைக்கு சென்று தங்கள் அன்பை, ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் இது ஒரு ஆரோக்கியமான நிகழ்வாக அனைவராலும் வரவேற்கப்படுகிறது.
முதல்வர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அடுத்த நாள் நானும், மஜக நிர்வாகிகளும் மருத்துவமனைக்கு சென்று அமைச்சர்களிடம் முதல்வரின் உடல் நலம் குறித்து நேரில் விசாரித்து அறிந்தோம்.
அவ்வப்போது அமைச்சர்களிடமும், அதிமுக நிர்வாகிகளுடமும் நான் நேரிலும், அலைபேசி வாயிலாகவும் முதல்வரின் உடல் நலம்
குறித்தும் விசாரித்து அறிந்தேன். அவர்கள் தந்த பதில்கள் ஆறுதல் அளிக்கும் வகையில் இருந்தது.
தற்போது முதல்வர் அம்மா அவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் வெளியிட்டிருக்கும் செய்திகள் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
ஒவ்வொருவரும் அவரவர் நம்பிக்கைகளின் அடிப்படையில் பிரார்தித்தனர், வழிபாடுகளை செய்தனர்.
மத நம்பிக்கையற்றவர்கள் வாழ்த்துக்களை கூறினர்.
அவை எதுவும் வீண் போகவில்லை என்பது நிம்மதியளிக்கிறது.
விரைவில் முதல்வர் அம்மா அவர்கள் வீடு திரும்பி, ஓய்வுக்கு பிறகு, வழக்கமான பணிகளில் ஈடுபட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.
அன்புடன்
M. தமிமுன் அன்சாரி, MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி